உள்ளடக்கத்துக்குச் செல்

தாமசு என்றி அக்சுலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசு என்றி அக்சுலி

தாமசு என்றி அக்சுலி (Thomas Henry Huxley 4 மே 1825–29 சூன் 1895) உயிரியல் துறை, விலங்கியல் துறை அறிஞர். கல்வியாளர், தார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் கருத்துகளையும் வரவேற்று அவற்றைப் பரப்பியவர். 'தார்வினின் புல்டாக்' என்றும் இவர் அழைக்கப்பட்டார்.[1][2][3]

இளமைக்கல்வி

[தொகு]

இலண்டன் அருகில் ஈலிங் என்னும் ஊரில் பிறந்த தாமசு என்றி அக்சுலி பள்ளியில் கற்றவை குறைவாக இருந்தபோதிலும் தம் சொந்த முயற்சியில் அறிவியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார். செருமன் மொழியையும் கற்றார். 15 ஆம் அகவையில் மருத்துவத்தைப் பயின்றார். எச் எம் எஸ் ராட்டில்ஸ்னேக் என்னும் கப்பலில் மருத்துவராகப் பயணம் செய்தார். அப்போது கடல் வாழ் உயிரினங்கள், முதுகெலும்பில்லா விலங்குகள், தொல்லுயிர்கள் முதலியனவற்றை ஆராய்ந்தார்.

கருத்துகள்

[தொகு]

அறிவியல் முன்னேற்றத்தினாலும் வளர்ச்சியினாலும் சமயக் கோட்பாடுகள் உண்மையல்ல என மெய்ப்பிக்கப்பட்டது என்று சொன்னார். கடவுள் பற்றிய ஐயப்பாட்டாளர் என்னும் பொருள் கொண்ட 'அக்னாஸ்டிக்' என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். தார்வினின் பரிணாமக் கொள்கை பற்றியும், இயற்கையும் மனிதனும் என்னும் கருத்துபற்றியும், நம்பா மதம், கிறித்தவம் பற்றியும் நூல்கள் எழுதினார். செய்முறைப் பயிற்சியே அறிவியல் கல்வி சிறக்க வழியாகும் என வலியுறுத்தினார்.

பிரேவ் நியூ வர்ல்ட் (Brave New World) என்னும் புகழ் பெற்ற புதினத்தை எழுதிய ஆல்டஸ் அக்சுலீ (aldous hukley) என்பவர் தாமசு என்றி அக்சுலியின் பெயரன் ஆவார்.

சான்றாவணம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Adrian J. Desmond, Huxley: From Devil's Disciple to Evolution's High Priest, Addison-Wesley, 1994, 1915, p. 651 n. 8.
  2. Encyclopædia Britannica Online 2006
  3. Livingstone, David. "Myth 17. That Huxley Defeated Wilberforce in Their Debate over Evolution and Religion," in Numbers, Ronald L., ed. Galileo goes to jail and other myths about science and religion. No. 74. Harvard University Press, 2009, 152–160.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_என்றி_அக்சுலி&oldid=4099439" இலிருந்து மீள்விக்கப்பட்டது